Saturday, July 10, 2010

கறுப்பு வேட்டை

(மேற்குவங்கம், ஒரிசா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சிபிஎம் ஊழியர்கள்
மற்றும்
அப்பாவி பொதுமக்கள் என அனைவரையும் கறுப்பு வேட்டை என்ற பெயரில்
கொன்று குவிக்கும்
கும்பலின் நாசவேளைகளில் சில)


இரு கண்ணிலும் வழிகிறது
கண்ணீரல்ல ரத்தம்
பூமியேங்கும் பரவுகிறது
அஞ்சலி செலுத்த

சமுதாயத்தை புறம்தள்ளி
உயிர்களை மதியாது
யாருக்கான போராட்டம்
எம்மக்களை சுட்டுவீழ்த்தி
குப்பை போல் போட்டால் போதுமா?

வறுமையை போக்க வழி சொல்லியிருக்கலாம்
வாழ்வின்மையை தடுத்திருக்கலாம்
சுரண்டலை புரிய வைத்திருக்கலாம்
தாகத்தில் வலி கொண்டபோது
எச்சிலாவது உமிழ்ந்திருக்கலாம்
வெறிகொண்ட உன் வேட்டை அடங்காவிடின்
மொத்தமாக கொல்வதற்கு
ஹிட்லரிடம் கற்றுவா
குருதிச் சிவப்பை முகங்களில் பூசி
அடக்கிக் கொள் உன் ஆத்திரத்தை

அதிகாரத்தை அடக்கப் போவதாக
உயிர்களை கொன்று
யாரிடம் அதிகாரம் செலுத்துவாய்
உன்னிடமே வழங்குவதாக கூறுவாயா?
சிரிப்புதான் வருகிறது

ஊழலான ஜனநாயக அரசியல் என்று
போதை இலையில் பொருளீட்டுவாய்
சுரங்கங்களை தோண்டித்தள்ளுவாய்
மக்களாட்சி பாதையிலென்றால்
காட்டில் வாழும் நீங்களா
வாழ்வை வசந்தமாக்குவீர்?

அதிகாரத்தை கைப்பற்ற
மக்களை மயிரென மதிப்பதும்
மக்களுக்காகவெனில்
கறுப்பு வேட்டை என்பது வேறென்ன
மக்களைக் கொல்வதன்றி

1 comments:

Murugeswari Rajavel said...

படங்களும்.பதிவுகளும் வலி ஏற்படுத்துகிறது.உண்மையைச் சொல்லுகிறது கறுப்பு வேட்டை.

Ads 468x60px

Featured Posts