ஓரிரவின்
பொன் மொழியில்
"பாராட்டுதல்
சாதாரணம்தான்
ஜனநாயகத்தில் அளவு
அதிகமாயின் ஆபத்து"
தம்பிக்கோ
திரையுலகம் பாராட்டு
ஊழியர்கள் புகழாரம்
காவலரென பெருமிதம்
பேரவையில் வாழ்த்துரை
யுகமெல்லாம் நொடியாகும்
மகேசனின் விடிவுக்கு
நிமிடங்கள் குறைந்திடுமே
ஜனநாயகம் என்றல்லோ
இடித்துரைத்தார்
இங்கே
காந்திகள் அன்றோ ராஜியம்
பொதுமறையின் புகழ்மணக்க
ஈரடியில் அதிசயிக்க
அறிவுஅமுது ஊற்றெடுத்து
சிந்தைக்குச் சிரமிட்ட
செம்மொழியாம் தமிழ்மொழியின்
புகழ்ச்சிக்குச் சங்கமிடல்
தம்பிக்குக் கவிபாட
தமிழ்க்கவிகள் உண்டன்றோ
உரைவீச்சில் மூச்சிரைக்க
கரையாளர் பின்னுன்றோ
பேச்சினிலே புகழ்மாலை
பூசலுக்கு முன்னின்று
எம்மொழியின் சிறப்பனைத்தும்
தனியொருவர் புகழ்ச்சிக்கா?
Tuesday, June 15, 2010
Subscribe to:
Post Comments (Atom)






0 comments:
Post a Comment