Thursday, June 3, 2010

ஹைக்கூ............

எதையும் இழப்பேன்
உன்னைத்தவிர-உன்னையும்
இழப்பேன் உனக்காக


சில்லறை சொற்கள்
சிதறவிட்டு எடுத்தால்
செல்லாக் காசு


புத்தக சுமை
கல்வி கற்கவா
மூட்டை தூக்கிப்பழக


தமிழில் பயில உபதேசம்
குழந்தையை
காண்வெண்ட் அனுப்பிவிட்டு


சாக்கடையை சுத்தம் செய்தால்
சுகாதாரம் - சாக்கடையுள்
இறங்குபவன் தீண்டத்தகாதவன்


நெசவு செய்ய கஞ்சி
நெசவாளனுக்கும்
கஞ்சித் தொட்டி


வேளாண் கடன்
உயர்வு - வானம்
பார்த்த பூமிக்கு


இலவச அறிவிப்பு
உன் உழைப்புக்கு
ஊதியமும் தான்


சத்தம் போட்டு பேசு
ஒலி வராமல்
ஜனநாயக நாடு


நிலத்திற்கு காசு
தண்ணீருக்கு காசு
காற்றுக்கு எப்போது?

0 comments:

Ads 468x60px

Featured Posts