
புல்வெளியின் பனித்துளியும்
பூமொட்டு விரித்த செவ்விதழும்
அந்தி நேர செவ்வானமும்
இதமான மாலைத் தென்றலும்
இருள் நீக்கும் முழுநிலவும்
மெய் சிலிர்க்கும் கார்மேகமும்
கண்களை வருடும் வானவில்லும்
விரித்தாடும் மயில் இறகும்
துள்ளியோடும் மான் கூட்டமும்
இசை நீட்டும் கடல்அலையும்
ராகமாகும் குயில் பாட்டும்
வாசமிக்க மலர்களும்
முகம் மலர்ந்து இதழ்விரிக்கும்
உன் புன்சிரிப்புக்கு ஈடாகுமா?






2 comments:
எப்பேர் பட்டவரையும் புன்சிரிப்பு கவர்ந்திடும்.
nice
Post a Comment