
என் ஜனனத்தில்
கேட்டதா அழுகுரல்...?
வான் குண்டுகள்
அல்லவா பொழிந்தன....?
ஆழ்மனம் துடித்ததே
எத்தனை நாளா....?
சுதந்திரமாய் அழக்கூட
உரிமையில்லையா...?
நரகமென்று கதை கூறி
அச்சமூட்டினாய்...?
வாழ்வதும் நரகத்தில்
என்று கூறவில்லையே...?
அழுகுரல் கேட்கவே
இத்தனை காலம்....?
எனக்குள் கனவுகளை
உருவாக்க எத்தனை யுகமோ...?






1 comments:
எரியும் வயிறும்,எரியாத அடுப்பும்!
எத்தனை யுகமோ?இதை வெல்ல?
Post a Comment