Monday, July 4, 2011

டாஸ்மாக் கடையில் கடவுள்



கடவுள் ஒரு நாள் பூமிக்கு வந்தாராம். டாஸ்மாக் கடையிலிருந்து பரவசமாக வருகிற குடிமகன்களைப் பார்த்துப் பொறாமை கொண்டாராம். அப்படி என்னதான் இருக்கு இந்தக் கடைக்குள் 'என்று எண்ணியவராக உள்ளே சென்றாராம்.

விற்பனையாளரிடம் தரமான சரக்கு தருமாறு ஆர்டர் செய்தாராம். இருப்பதிலேயே விலை அதிகமான பீர் பாட்டிலை கடைக்காரர் கொடுக்க, ஒரே மூச்சில் அதைக் குடித்துவிட்டு நின்றாராம் கடவுள். ஒண்ணும் தெரியலையே, என்று கடைக்காரரிடம் சொல்ல, அவர் இன்னொரு பாட்டில் கொடுத்தார். அதையும் முடித்துவிட்டு எதுவும் வித்தியாசமாகத் தெரியவில்லையே என்று கூறினார் கடவுள். விற்பனையாளர் இன்னொரு பாட்டில் கொண்டுவந்து கொடுத்தார். அதைக் குடித்த பிறகும் கடவுள், என்னப்பா ஒண்ணுமே தெரியலையே, என்றே சொன்னார். இப்படியாக 5 முழு பாட்டில்கள் தீர்ந்தன. அப்போதும் ஒன்றும் ஆகவில்லை..

கடைக்காரருக்கு ஆச்சரியம் தாளவில்லை. என்னய்யா இது, அவனவன் முதல் பாட்டிலேயே போதை ஏறி உளற ஆரம்பிச்சிடுவாங்க நீ என்னடான்னா இத்தனை பாட்டிலுக்குப் பிறகும் ஒண்ணும் செய்யலைங்கிறியே... யாருப்பா நீ என்று கேட்டார்.
அதற்குக் கடவுள், நான்தான் கடவுள்... என்றார்.

அதைக் கேட்டு கடைக்காரர் சொன்னார்: தோடா..! தொரைக்கு இப்பதான் ஏர ஆரம்பிச்சி இருக்கு...!

(தீக்கதிர், வண்ணக்கதிர் 19 ஜூன் 2011)

0 comments:

Ads 468x60px

Featured Posts